» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் சந்திக்க மறுப்பு? மோடியை சந்திக்கும் முடிவைக் கைவிட்டார் ஓ.பி.எஸ்..!!

சனி 12, ஆகஸ்ட் 2017 5:50:56 PM (IST)

நேரம் ஒதுக்காததால், பிரதமர் மோடியைச் சந்திக்கும் முடிவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வந்திருந்தார் ஓ.பன்னீர் செல்வம். பின்னர் பிரதமர் மோடியைச் சந்திக்க திட்டமிட்டு முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி, நேரம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் டெல்லியிலேயே தங்கி காத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது முயற்சிகளை கைவிட்டு விட்டு ஷீரடிக்குப் புறப்பட்டுப் போனார். 

அவருடன் மைத்ரேயனும் ஷீரடிக்குப் போயுள்ளார். முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த பிரதமர், ஓ.பி.எஸ்ஸை சந்திக்க மறுத்தது ஏன் என்று தெரியவில்லை. ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு ஓபிஎஸ் சென்னை திரும்புவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



New Shape Tailors


Universal Tiles Bazar

Johnson's Engineers


selvam aqua


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory