» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா மீண்டும் பெங்களூர் சிறைக்கு இன்று புறப்பட்டார்!!

வியாழன் 12, அக்டோபர் 2017 3:40:05 PM (IST)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  கணவர் நடராஜனை காண பெங்களூர் சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா மீண்டும் பெங்களூர் சிறைக்கு இன்று புறப்பட்டார். 

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலா கணவர் நடராஜன் உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த 9 மாதங்களாக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இதை தொடர்ந்து கணவரை பார்க்கவும், அவரை உடன்  இருந்து கவனித்துகொள்ளவும் பரோல் கோர விரும்பினார் சசிகலா. இதையடுத்து கர்நாடகா  மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தலைமையில் வக்கீல்கள் பெங்களூர் பரப்பன  அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் அனுபதி கேட்டனர். ஆனால் சசிகலா அணியினர் தாக்கல் செய்த ஆவணங்கள் போதியதாக இல்லை என கூறி முதலில் நிராகரித்தது. இதையடுத்து கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

இதை ஏற்றுகொண்ட சிறை நிர்வாகம் சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கியது. இதையடுத்து கடும் நிபந்தனைகளின் நடுவே கடந்த 6ம் தேதி  சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சென்னை வந்தார். சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் சசிகலா தங்கினார். ஏற்கனவே, சசிகலா சிறையில் இருந்த போது சிறை விதிகளை மீறியதாக வீடியோ ஆதாரம் வெளி வந்தது. 

இதற்கிடையே 5 நாட்கள் பரோலில் சசிகலா வெளிவந்த நிமிடம் முதல் அவரை மத்திய, மாநில உளவு துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனால், விஐபிக்களும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சசிகலாவை நேரடியாக வந்து பார்ப்பதை தவிர்த்தனர். இதனால் தி.நகர் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு மட்டுமே சசிகலா சென்று வந்தார். வேறு எங்கும் செல்ல முடியாததால் கடந்த நான்கு நாட்களும் உறவினர்களிடம் சொத்து பிரச்னை, பினாமி சொத்துக்களை யார் நிர்வகிப்பது, அரசியல் ரீதியான விசயங்களில் குடும்ப உறுப்பினர்கள் யார், யார் தலையிட வேண்டும் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார். 

மேலும், அவர் கடந்த நான்கு நாட்கள் எடப்பாடி அணி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் 5 நாட்கள் பரோல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசிகலா புறப்பட்டார். முன்னதாக தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள் வெற்றிவேல், ரத்தினசபாபதி, தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, கதிர்காமு உள்ளிட்டோர் சசிகலா சிறை திரும்புவதை முன்னிட்டு அவரை தி.நகர் இல்லத்தில் சந்தித்தனர். 

மேலும், பெங்களூருக்கு சாலை வழியாகவே சசிகலா செல்வதால் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு அதிகமாக காணப்பட்டது. ஏற்கனவே சசிகலா கடந்த 6ம் தேதி சென்னை வந்த போது அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் நேரடியாக சந்திப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் 5 நாட்கள் ஆகியும் எடப்பாடி அணியில் உள்ள யாரும் நேரடியாக வந்து சந்திக்காததால் ஏமாற்றத்துடனே சசிகலா சிறைக்கு திரும்புகிறார். 


மக்கள் கருத்து

TAMILANOct 12, 2017 - 05:53:49 PM | Posted IP 115.2*****

இப்போ இது ரொம்ப முக்கியமான விஷயமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


selvam aqua


CSC Computer Education

Johnson's Engineers


Sterlite Industries (I) Ltd

Nalam Pasumaiyagam

Universal Tiles BazarThoothukudi Business Directory