» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத் தான்.... அமைச்சரை கலாய்த்த ராமதாஸ்!!

வெள்ளி 13, அக்டோபர் 2017 12:07:49 PM (IST)

டெங்குவை ஒழிக்க வாசலில் சாணம் தெளிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சருக்கு அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் வழங்க வேண்டும் என ராமதாஸ் கலாய்த்துள்ளார்.

மதுரை சோலையழகுபுரத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோருடன் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், குடங்களில் சேகரித்து வைத்த தண்ணீரை அப்புறப்படுத்த சொன்ன அமைச்சர், ‘முன்பெல்லாம் வீட்டு முற்றத்தில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளித்ததால் எந்த கொசுவும் வரல. அதுபோல நீங்களும் வீட்டு முற்றத்தில் சாணத்தை தெளியுங்கள், எந்த கொசுவும் வராது. டெங்குவும் வராது’ என்றார்.

வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது’ என்று யோசனை தெரிவித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: செல்லூர் ராஜு - அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத் தான் தர வேண்டும்!" எனப் பதிவு செய்துள்ளார். முன்னதாக, வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் திட்டத்தை அமல்படுத்தியதற்காக நெட்டிசன்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, சாணம் தெளிக்கும் யோசனையால் தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் கிண்டல் கேலிக்கு உள்ளாகி வருகிறார். சாதாரண மக்கள் கிண்டல் செய்துவந்த நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸும் கிண்டல் செய்திருக்கிறார்.


மக்கள் கருத்து

ஆப்Oct 13, 2017 - 12:38:35 PM | Posted IP 171.4*****

முன்னெல்லாம் வீட்டுக்கு உள்ளேயும் சாணம் மொழுகியிருப்பாங்க. நம்ம தெர்மோகோல் விதிப்படி நம்ம அதையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua

Sterlite Industries (I) Ltd

CSC Computer EducationNew Shape TailorsUniversal Tiles Bazar

Nalam Pasumaiyagam

Johnson's EngineersThoothukudi Business Directory