» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டெங்கு ஒழிப்பில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது : மத்திய குழு உறுப்பினர் பாராட்டு

வெள்ளி 13, அக்டோபர் 2017 1:16:44 PM (IST)

டெங்கு ஒழிப்பில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என மத்திய மருத்துவ குழு உறுப்பினர் அஸ்தோஷ் பிஸ்வாஸ் சென்னையில் கூறினார்.

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவதால் அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களும் டெங்கு காய்ச்சலால் அச்சமடைந்துள்ளனர். இன்று தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய மருத்துவ குழு உறுப்பினர் அஸ்தோஷ் பிஸ் வாஸ் சென்னை வந்தார்.அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிஸ்வாஸ் கூறும் போது.டெங்கு பாதிப்பால் தமிழகத்தில் அசாதாரண சூழல் இல்லை.டெங்கு என தெரிந்தும் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருவதால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது.டெங்குவை ஒழிப்பதில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனவே டெங்கு பாதிப்புகளுக்கு முழுமையாக அரசை குறை கூற முடியாது என்ற அவர் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


மக்கள் கருத்து

உண்மைOct 13, 2017 - 05:39:45 PM | Posted IP 122.1*****

உதவி செய்றவனை பாராட்டணும் இப்படி பழிக்க கூடாது மூடர்களே!

பாலாOct 13, 2017 - 03:30:14 PM | Posted IP 61.14*****

டெல்லி கைக்கூலி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

selvam aqua

Nalam Pasumaiyagam


New Shape Tailors


Universal Tiles Bazar

Johnson's Engineers

CSC Computer Education




Thoothukudi Business Directory