» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!

வெள்ளி 13, அக்டோபர் 2017 4:16:31 PM (IST)

வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

பணத்தகராறில் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த் மற்றும் காண்ட்ராக்டர் சண்முகம் சுந்தரம் ஆகியோரை நடிகர் சந்தானம் தாக்கினார். இதுதொடர்பாக அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கைது நடவடிக்கை பயந்து நடிகர் சந்தானம் தலைமறைவானார். 

மேலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சந்தானத்துக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. நடிகர் சந்தானம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி 2 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

Nalam Pasumaiyagam

New Shape Tailors


selvam aqua

Universal Tiles BazarThoothukudi Business Directory