» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்திற்கு நல்லது நடந்து விடுமோ என பதறுவது ஏன்? ஆளுநர் ஆய்வு சர்ச்சை குறித்து தமிழிசை கேள்வி

புதன் 15, நவம்பர் 2017 12:46:31 PM (IST)

நல்லது நடந்து விடுமோ என மற்றவர்கள் பதறுவது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும் பல இடங்களில் ஆய்வு நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆளுநர் ஆய்வு செய்ததில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார். தமிழக ஆளுநரின் நடவடிக்கை பாராட்டக்கூடிய வகையில்தான் உள்ளது என்றார்.

மாநில அரசின் தேவைகளை சிறப்பாக செய்யவே ஆளுநர் ஆய்வு செய்ததாகவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆளுநரின் ஆய்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். நல்லது நடந்து விடுமோ என்று மற்றவர்கள் பதறுவது ஏன் என புரியவில்லை  என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். முன்னதாக ஆய்வு நடத்தினால் தான் அரசின் செயல்பாட்டை பாராட்ட முடியும் என ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கூறியிருந்தார்.


மக்கள் கருத்து

M.RamanathaboopathiNov 16, 2017 - 02:57:17 PM | Posted IP 122.1*****

சாமி நீ யாரு? அதிமுகவுக்கும் ஜால்ரா பாஜகவுக்கும் ஜால்ரா. இதெல்லாம் ஒரு பொழப்பு

சாமிNov 15, 2017 - 06:19:36 PM | Posted IP 103.2*****

பூபதி தயவு செய்து விவரம் தெரியாமல் கருத்து பதிவு பண்ணாதீர்.

உண்மைNov 15, 2017 - 02:23:05 PM | Posted IP 122.1*****

நமது பணி தாய்நாட்டை முன்னேற்றம் அடையச்செய்வது! யார் என்ன கூறினாலும் மக்கள் நம் பக்கம்! ஜெய் ஹிந்த்!

M.RamanathaboopathiNov 15, 2017 - 01:54:32 PM | Posted IP 103.3*****

நல்லது உங்களால தமிழ்நாட்டுக்கு சரியான காமெடியா இருக்கே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

New Shape Tailors
Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals
Thoothukudi Business Directory