» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு 2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது

வெள்ளி 12, ஜனவரி 2018 7:30:04 PM (IST)

2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு வழங்கப்படுகிறது.

தமிழ் மொழி மற்றும இலக்கிய வளர்ச்சிக்குட் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொடர்ந்து செயலாற்றிய தமிழறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழ்க அரசு சார்பில் திருவள்ளுவர் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதே போன்று 2017ம் ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதில் 2018ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது  பெரியண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது  ஜார்ஜ் கே ஜேக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அறிஞர் அண்ணா விருது அ. சுப்ரமணியனுக்கும், காமராஜர் விருது  தினகரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது  பாலசுப்ரமணியனுக்கும், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது முனைவர் மருத நாயகத்திற்கும் வழங்கப்படுகிறது.

தந்தை பெரியார் விருது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு திருவிக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விருதுகள் 9 தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar


selvam aqua


New Shape Tailors






Johnson's Engineers




Thoothukudi Business Directory