» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி!!

சனி 13, ஜனவரி 2018 11:43:06 AM (IST)

திமுக தலைவர் கருணாநிதி, தைப் பொங்கலையொட்டி,  நாளை தொண்டர்களை சந்திக்கிறார். 

தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. பொங்கல் நாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது திமுக வழக்கம். இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, தனது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை கருணாநிதி நாளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருணாநிதி உடல்நலம் சரியில்லாததால் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தொண்டர்களுடன் சந்திப்பு நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருந்ததாக மருத்துவர்கள் கூறியதால் வீட்டிலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், கருணாநிதி நாளை நீண்ட இடைவெளிக்கு பிறகு, முதல் முறையாக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தொண்டர்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers








New Shape Tailors


selvam aqua


Universal Tiles Bazar



Thoothukudi Business Directory