» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை: நாகை அருகே சோகம்

ஞாயிறு 14, ஜனவரி 2018 4:16:43 PM (IST)

நாகை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் கண்ணன்(55). இவர், தனது மாடி வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். வீட்டின் மேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி குணசுந்தரி (50), மகள்கள் சரண்யா (22), சுகன்யா (20). மகள் சரண்யாவுக்கும், விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், சரண்யா தனது கணவர் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சனிக்கிழமை விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்ப்பதற்காக ஆக்கூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் பேசிவிட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று மாலை அக்கம் பக்கத்தினர் மளிகை பொருட்களை வாங்குவதற்காக கண்ணன் கடைக்கு சென்றனர். அப்போது கடை பூட்டியே கிடந்தது. பின்னர் அவர்கள், கண்ணன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் உள்ள 2 அறைகளில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர். 

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து செம்பனார்கோவில் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து செம்பனார்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சரண்யாவின் கணவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar


Johnson's Engineers



New Shape Tailors


selvam aqua








Thoothukudi Business Directory