» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்து கட்டண உயர்வுக்கு தொழிலாளர்களை குறை கூறுவதா ? : தொமுச கண்டனம்

சனி 20, ஜனவரி 2018 2:30:48 PM (IST)

பேருந்து கட்டண உயர்வுக்கு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணம் என குற்றம்சாட்டுவது கண்டனத்திற்குரியது என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கூறியுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் தங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பல ன்களை உடனே வழங்க கோரி பேருந்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்து. இது குறித்து தொமுச வெளியிட்ட செய்திகுறிப்பில் பேருந்து கட்டண உயர்வுக்கு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணம் என சிலர் குற்றம்சாட்டுவது கண்டனத்திற்குரியது.நாங்கள் எங்களின் நியாயமான கோரிக்கைக்கு போராடினோம். பேருந்து கட்டண உயர்வுக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டதிற்கும் சம்பந்தமில்லை.மேலும் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெறவும் தொமுச வலியுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
Johnson's Engineers

New Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory