» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா மரணம் குறித்து பேச்சு: திவாகரனுக்கு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் முடிவு!!

சனி 20, ஜனவரி 2018 4:57:02 PM (IST)

ஜெயலலிதா மரணம் குறித்து பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் புகார் மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தவர்கள் மட்டுமல்லாமல் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்களிடமும் நேரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதியே இறந்து விட்டதாகவும், ஆனால், 5-ந் தேதி இரவு தான் அவர் இறந்து போனதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தை சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்பு அவர், தான் கூறிய கருத்துக்கு விளக்கம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கடந்த மாதம் திடீரென வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து அந்த வீடியோவை தாக்கல் செய்ய வெற்றிவேலுக்கு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அவரது வக்கீல்கள், வீடியோவை ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பான வீடியோ காட்சி மற்றும் ஆவணங்களை பொது வெளியில் வெளியிட ஆணையம் தடை விதித்தது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் கூறி உள்ள கருத்து தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

Johnson's EngineerscrescentopticalsThoothukudi Business Directory