» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலமானார்

ஞாயிறு 21, ஜனவரி 2018 10:06:49 AM (IST)

முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மனைவியும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான சிந்தியா பாண்டியன் (வயது 71) சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை குன்றியிருந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று அவர் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

சிந்தியா பாண்டியன், 2009-ல் அதிமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டவர். அவருக்கு மனோஜ் பாண்டியன், அரவிந்த் பாண்டியன் என்ற இரண்டு மகன்கள். மனோஜ் பாண்டியன் அதிமுக சார்பில் சேரன்மகாதேவி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மாநிலங்களவை எம்.பியாகவும் இருந்தவர். மற்றொரு மகன் அரவிந்த் பண்டியன் கூடுதல் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals

Johnson's EngineersThoothukudi Business Directory