» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரவுடி பினுவை சரணடைய வைத்தது எப்படி ? : அம்பத்தூர் சரக துணைஆணையர் பேட்டி

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 1:45:38 PM (IST)

ரவுடி பினுவை சரணடைய வைத்தது எப்படி என அம்பத்தூர் சரக துணை ஆணையர் சர்வேஷ் பேட்டியளித்தார்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர், பிரபல ரவுடி பினு. இவர்மீது சூளைமேடு, வடபழனி உள்ளிட்ட சென்னை காவல் நிலையங்களில் பல்வேறு கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்துவந்தார். இதனிடையே, கடந்த 6-ம் தேதி மாங்காடு பகுதியில் பினுவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சென்னையின் முக்கிய ரவுடிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், கொண்டாட்ட இடத்துக்கு விரைந்து சென்று 72 பேரை துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர்.

இதன்பின்னர், இவர்களைத் தேடும் பணியைத் தமிழகக் காவல்துறை முடுக்கிவிட்டது. நான்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் போலீஸார் தேடிவந்தனர்.  ரவுடி பினு, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளார். 8 நாள் தலைமறைவுக்குப் பின்னர், அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்வரன் முன்னிலையில் பினு சரணடைந்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அம்பத்தூர் சரக துணை ஆணையர் சர்வேஷ், 6 தனிப்படைகள் அமைத்து, தப்பிச்செல்ல முடியாத வகையில் நடவடிக்கை எடுத்ததால் தான் ரவுடி பினு சரணடைந்தார். தப்பியோடிய பினுவின் கூட்டாளிகள் மேலும் 2 பேர் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors
Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticalsJohnson's Engineers
Thoothukudi Business Directory