» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெ. விவகாரத்தில் ராகுல் காந்தியை கேள்வி கேட்க விஜயதரணி யார்?: திருநாவுக்கரசர்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 3:42:38 PM (IST)

"ஜெயலலிதா படத்திறப்பு தொடர்பாக விவகாரத்தில் ராகுல் காந்தியை கேள்வி கேட்க விஜயதரணி யார்?" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் நேற்று திறக்கப்பட்டது. ஆனால் இதற்கு கட்சி கட்டுப்பாட்டையும் மீறி ஆதரவு தெரிவித்த விஜயதரணி ஜெயலலிதா இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி பங்கேற்றது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். விஜயதரணியின் இந்த பேச்சு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறுகையில், விஜயதரணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பப்படும். ஜெயலலிதா விவகாரத்தில் ராகுல் காந்தியை கேள்வி கேட்க விஜயதரணி யார். ஜெயலலிதா படத்திறப்பு தொடர்பாக விஜயதரணி பேசியது சரியல்ல. சர்ச்சை இருப்பதால்தான் மாவட்டம் மாவட்டமாக செல்லும் ஆளுநரே ஜெயலலிதா படத்திறப்பில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Johnson's Engineers


New Shape Tailors






Thoothukudi Business Directory