» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோயில்களில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை : தமிழகமுதல்வர் உத்தரவு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 7:12:06 PM (IST)

தமிழகம் முழுவதும் கோயில்களில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த பிப் 2 ம் தேதி கடும் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.அங்கு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இன்று மாலை முதல்வர் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , பெரிய கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும்.

கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும் என்றும் அக்கடைகளை  வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்ய முயல வேண்டும்  பெரிய கோயில் வளாகங்களின் அருகில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, உடனடியாக மீட்க வேண்டும். கோயில்களில் அசம்பாதவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களை பணியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


New Shape Tailors

Johnson's Engineers




Thoothukudi Business Directory