» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம்: எஸ்எம்எஸ்-ஐ அழித்துவிட்டால் மீண்டும் பெறுவது எப்படி?

செவ்வாய் 11, ஏப்ரல் 2017 5:45:59 PM (IST)

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு) குறித்து செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்-ஐ அழித்துவிட்டால், அதனை மீண்டும் பெறுவது எப்படி என்று ஆட்சியர் ரவிகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாட்டில் மின்னணு ரே‌ஷன்கார்டுகள், கடந்த 1–ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரே‌ஷன் கார்டு அச்சடிக்கப்பட்டு ரே‌ஷன் கடைக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கார்டுதாரரின் செல்போனுக்கு 8 இலக்க எண் கொண்ட குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை ரே‌ஷன் கடையில் காண்பித்து, மின்னணு ரே‌ஷன் கார்டை பெற்று ரே‌ஷன் பொருள் விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சிலர் செல்போனுக்கு வரும் குறுந்தகவலை சரிவர பார்க்காமல் அழித்து விடுகின்றனர். இதனால் அவர்கள் புதிய மின்னணு ரே‌ஷன் கார்டை பெற முடிவது இல்லை. இது போன்று குறுந்தகவலை அழித்து விட்டால், ரே‌ஷன் கார்டுதாரர்கள், ஏற்கனவே பதிவு செய்து உள்ள செல்போனில் இருந்து 1967 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அப்போது, பழைய ரே‌ஷன் கார்டின் எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு மீண்டும், அந்த செல்போனுக்கு 8 இலக்க எண் அனுப்பி வைக்கப்படும். அதனை வைத்து புதிய கார்டை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

P.b.sankaranJul 6, 2017 - 09:26:56 AM | Posted IP 106.2*****

Smart card checking

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd

CSC Computer Education

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar


Johnson's Engineers

selvam aqua



Thoothukudi Business Directory