» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஞ்சி கோப்பை: குஜராத் தொடக்க வீரர் உலக சாதனை!

செவ்வாய் 27, டிசம்பர் 2016 4:11:25 PM (IST)



ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் குஜராத் தொடக்க வீரர் சமித் கோயல்  ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ரஞ்சி காலிறுதிப் போட்டியில் ஒடிஸாவை எதிர்கொண்டுள்ள குஜராத், தனது 2-வது இன்னிங்ஸில் 641 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக, குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 95.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஒடிஸா 73.1 ஓவர்களில் 199 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 64 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத், 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 176 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 514 ரன்கள் எடுத்தது. 

இன்று அந்த அணி 641 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் தொடக்க வீரர் சமித் கோயல் ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் எடுத்து, முதல் தர கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் என்கிற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  இதற்கு முன்பு, சர்ரே அணியின் தொடக்க வீரர் பாபி அபேல், சோமர்செட் அணிக்காக ஆட்டமிழக்காமல் 357 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. அதை கோயல் முறியடித்துள்ளார்.  இதையடுத்து, ஒடிஸா அணிக்கு 706 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

jesus redeems

Sponsored Ads



CSC Computer Education

New Shape Tailors

Johnson's Engineers

Pop Up Here

Universal Tiles Bazar



selvam aqua


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory