» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அனுஷ்காவுடன் நிச்சயதார்த்தமா? விராட் விளக்கம்

வெள்ளி 30, டிசம்பர் 2016 4:15:46 PM (IST)

அனுஷ்கா சர்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானதற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சிலவருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். விடுமுறையைக் கழிக்க இருவரும் டெஹாராடூன் சென்றார்கள். அங்கு கிறிஸ்துமஸும் புத்தாண்டும் கொண்டாட முடிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்ததாவது: நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளவில்லை. அப்படிச் செய்ய இருந்தால் அதை எல்லோருக்கும் சொல்வேன். மறைக்கமாட்டேன். அவ்வளவுதான். செய்தித் தொலைக்காட்சிகள், வதந்தியான செய்திகளைச் சொல்லி உங்களைக் குழப்புவதால் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கபில் தேவ் சாதனையைத் தாண்டிய அஸ்வின்!

வெள்ளி 24, பிப்ரவரி 2017 5:08:20 PM (IST)

Annai Jewellers

Sponsored Ads

Black Forest Cakes







CSC Computer Education


selvam aqua



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory