» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக பாலாஜி நியமனம்

செவ்வாய் 3, ஜனவரி 2017 8:41:12 PM (IST)

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ அணி வீரராக கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டு வரை விளையாடிய லஷ்மிபதி பாலாஜி, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2016 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். 

தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ள பாலாஜி, தமிழக கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். 

இந்தநிலையில், 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பாலாஜி, கொல்கத்தா அணி வீரராக சிறப்பான அனுபவத்தைப் பெற்றேன். மீண்டும் அந்த அணியில் இணைவது மகிழ்ச்சி என நெகிழ்ந்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Black Forest Cakes




CSC Computer Education






Thoothukudi Business Directory