» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டிருப்பேன் : சுனில் கவாஸ்கர்

வியாழன் 5, ஜனவரி 2017 6:51:33 PM (IST)

தோனி மட்டும் கேப்டன் பதவியைத் துறந்ததற்கு பதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டிருப்பேன் என சுனில் கவாஸ்கர் கூறினார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகுவதாக தோனி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தோனி மட்டும் கேப்டன் பதவியைத் துறந்ததற்கு பதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டிருப்பேன். அவர் தொடர்ந்து விளையாடுவதற்கு முடிவெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான் தோனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் தற்போதே கேப்டன் பதவியை விராட் கோலி ஏற்கும்படி செய்துள்ளார். இந்த காரணத்துக்காக தோனியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கபில் தேவ் சாதனையைத் தாண்டிய அஸ்வின்!

வெள்ளி 24, பிப்ரவரி 2017 5:08:20 PM (IST)

Annai Jewellers

Sponsored Ads



CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes





selvam aqua





Thoothukudi Business Directory