» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

எனக்கு எப்போதும் தோனிதான் கேப்டன்: கோலி புகழாரம்

வெள்ளி 6, ஜனவரி 2017 3:58:56 PM (IST)



எனக்கு எப்போதும் தோனிதான் கேப்டன் என்று விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று காலை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள கோலி, இளைஞர்கள் விரும்பும் வகையிலும், உத்வேகம் அளிக்கும் தலைவராகவும் இருந்ததற்கு நன்றி. எனக்கு எப்போதுமே நீங்கள்தான் கேப்டன் தோனி என்று கூறியுள்ளார்.2008-ல் கோலி கிரிக்கெட் பிரவேசத்தை நிகழ்த்தினார். அன்றிலிருந்து ஒருநாள் போட்டி, டி 20, டெஸ்ட் போட்டி என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி தலைமையின் கீழ் விளையாடியவர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் ராகுல் திராவிட் இருவரும் கோலி தலைமையேற்க இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளனர். கோலி 2019 உலகக் கோப்பைக்குத் தயாராக இப்போது இருக்கும் இரண்டரை ஆண்டுகள் இடைவெளி போதுமானதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Panchai Dairy


Black Forest Cakes


New Shape Tailors

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Johnson's Engineers



selvam aqua



Thoothukudi Business Directory