» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு : மீண்டும் இடம் பிடித்தார் யுவராஜ் சிங்

வெள்ளி 6, ஜனவரி 2017 5:20:17 PM (IST)



ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் இந்திய அணி கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் யுவராஜ் சிங் இடம்பிடித்துள்ளார். 

ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) அறிவித்தார்.  கேப்டன் பதவியை தோனி துறந்ததையடுத்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக விராட் கோலி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 அணியில் மீண்டும் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தோனி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாகத் தொடர்கிறார்.   இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

ஒருநாள் போட்டி : 

விராட் கோலி (கேப்டன்) தோனி (விக்கெட் கீப்பர்), ராகுல், ஷிகர் தவண், மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், யுவ்ராஜ் சிங், ரஹானே, பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா, பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்

டி20 போட்டி :

விராட் கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், ராகுல், யுவ்ராஜ் சிங், ரெய்னா, ரிஷப், பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, சஹால், மனிஷ் பாண்டே, பூம்ரா, புவனேஸ்வர் குமார், நெஹ்ரா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers

Panchai Dairy

Nalam Pasumaiyagam


selvam aqua


CSC Computer Education


Black Forest Cakes

New Shape Tailors





Thoothukudi Business Directory