» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 கிரிக்கெட் தரவரிசை : இந்திய அணி முன்னேற்றம்

திங்கள் 25, டிசம்பர் 2017 8:50:00 PM (IST)

டி20 போட்டியில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்ததின் மூலம் தரவரிசைபட்டியலில் 2வது இடத்திற்கு இந்தியஅணி முன்னேறியுள்ளது.

இந்தியா, இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து வெளியிடப்பட்ட ஐசிசி டி20 தரவரிசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  இத்தொடரில் பங்கேற்காத விராட் கோலி, சரிவைச் சந்தித்தார். கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா முன்னேற்றம் கண்டார்.

ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது.  தற்போது இந்த தொடரைக் கைப்பற்றியதுடன் 121 புள்ளிகளைப் பெற்று இங்கிலாந்து, நியூஸிலாந்து, மே.இ.தீவுகளைக் கடந்து தரவரிசையில் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்த தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற்ற விராட் கோலி, 824 புள்ளிகளில் இருந்து 776 புள்ளிகளுக்கு சரிந்து முதலிடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்கு இறங்கினார். 

இதனால், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் முதலிடத்துக்கு முன்னே றினார். ஐசிசி விதிகளின்படி தனிப்பட்ட வீரர் ஒரு போட்டியில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது தரவரிசைப் புள்ளிகளில் இருந்து 2 சதவீதம் குறைக்கப்படும். இந்த தொடரில் இருந்தே விராட் கோலி விலகியுள்ளதால் அவருக்கு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட துவக்க வீரர் லோகேஷ் ராகுல், 23 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 4-ஆம் இடத்தைப் பிடித்தார். கேப்டன் ரோஹித் ஷர்மா, 6 இடங்கள் முன்னேறி 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


New Shape Tailors

selvam aqua








Universal Tiles Bazar




Thoothukudi Business Directory