» சினிமா » செய்திகள்

பர்ஹான் வீட்டிலிருந்து தந்தை இழுத்துச் சென்றாரா? நடிகை ஷிரத்தா கபூர் விளக்கம்

புதன் 4, ஜனவரி 2017 4:53:01 PM (IST)

பிரபல நடிகரான பர்ஹான் அக்தரும், நடிகை ஷிரத்தா கபூரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் பர்ஹான் வீட்டில் இருந்த ஷிரத்தா கபூரை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் பர்ஹான் வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு தரதரவென இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகியது. இதுகுறித்து சக்தி கபூர் கூறுகையில், கோவாவில் இருந்து திரும்பி வந்ததும் என் மகள் குறித்த செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தேன். பர்ஹான் வீட்டில் இருந்து ஷிரத்தாவை நான் இழுத்து வரவில்லை என சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

பர்ஹான் அக்தர் கடந்த வருடம் தான் தனது மனைவியை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இவர்களின் விவாகரத்திற்கு ஷிரத்தா கபூர் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து ஷிரத்தா கபூர் கூறியதாவது: பர்ஹான் அக்தர் வீட்டில் இருந்து எனது தந்தை என்னை தரதரவென்று இழுத்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் சிறிதும் உண்மை இல்லை. ஏற்கனவே நடிகர் ஆதித்யா ராய் கபூரும் நானும் காதலிப்பதாக வதந்தி பரப்பினார்கள். இப்போது பர்ஹான் அக்தருடன் இணைத்து பேசுகிறார்கள். 

என்னைபற்றி எது சொன்னாலும் தாங்கிக்கொள்வேன். ஆனால் எனது குடும்பத்தினரை இதில் இழுப்பதைத்தான் பொறுக்கமுடியவில்லை. எனது பெற்றோர்கள் வீட்டில்தான வசிக்கிறேன். எனக்கு தனியாக வீடு இருந்தாலும் அங்கு நான் இருப்பது இல்லை.” இவ்வாறு ஷிரத்தா கபூர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory