» சினிமா » செய்திகள்

யு சான்றிதழுடன் பைரவா ஜன.12-ல் வெளியாகிறது...

புதன் 4, ஜனவரி 2017 7:26:30 PM (IST)விஜய் நடிப்பில் உருவாகிவுள்ள பைரவாவுக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாவு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பைரவா. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. ஜனவரி 3ம் தேதி இப்படத்தை தணிக்கைக் குழு பார்த்து யு சான்றிதழ் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து படக்குழு, ஜனவரி 12-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்னதாக, புத்தாண்டை முன்னிட்டு பைரவா ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது, தணிக்கைப் பணிகளும் முடிந்துவிட்டதால், படத்தை விளம்பரப்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகிறது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory