» சினிமா » செய்திகள்

சாவித்திரி வாழ்க்கை வரலாறு : சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்

சனி 7, ஜனவரி 2017 7:31:15 PM (IST)


நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து உருவாகவுள்ள படத்தில், சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி 2, தெலுங்கில் த்ரிவிக்ரம் - பவன் கல்யாண் இணையும் படம் ஆகியவற்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்க உள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின். இவர் பெரும் வரவேற்பைப் பெற்ற யவடு சுப்பிரமணியம் படத்தின் இயக்குநர். இப்படத்தை தயாரிப்பாளர் அஸ்வின் தத் தயாரிக்கவுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய மகள்கள் தயாரிக்கவுள்ள சாவித்திரி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், கதையை முன்நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

தற்போது பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory