» சினிமா » செய்திகள்

உங்களிடம் இருக்கிறது வெற்றிப் புன்னகை : தன்ஷிகாவுக்கு ஸ்ரீப்ரியா அறிவுரை

திங்கள் 2, அக்டோபர் 2017 7:49:33 PM (IST)

இனியும் கண்ணீர் வேண்டாம் தன்ஷிகா. உங்களிடம் இருக்கிறது வெற்றிப் புன்னகை. சிரித்தபடி இருங்கள் என்று ஸ்ரீப்ரியா அறிவுரை வழங்கி உள்ளார்.

விழித்திரு பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. விஷால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் டி.ராஜேந்தருக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள்.

இந்த சர்ச்சை குறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்பு தன்ஷிகா.. எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்துக்கு, உங்கள் மீதான மிக முரட்டுத்தனமான எதிர்வினை அது. மேடை நாகரிகம் என்பதை விட, ஒரு பெண்ணிடம் அன்போடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்வது முக்கியம் என்பதை இன்னும் சிலர் புரிந்து கொள்ளவில்லை என்பது பரிதாபம்.

ஒரு பெண்ணை அவமானப்படுத்தும்போது அவருடன் மேடையில் இருக்கும் இரு ஆண்கள் சிரித்துக் கொண்டிருப்பது அதைவிட எரிச்சலான விஷயம். இனியும் கண்ணீர் வேண்டாம் தன்ஷிகா. உங்களிடம் இருக்கிறது வெற்றிப் புன்னகை. சிரித்தபடி இருங்கள் என்று ஸ்ரீப்ரியா அறிவுரை வழங்கி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory