» சினிமா » செய்திகள்

நெருங்கிய நண்பரிடமே ரூ. ரூ.46 லட்சம் மோசடி? சுந்தர்.சி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

வியாழன் 5, அக்டோபர் 2017 4:48:38 PM (IST)

இயக்குநர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி செய்துவிட்டதாக நெருங்கிய நண்பர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனு கொடுத்தவர் பெயர் வேல்முருகன் (47) அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 27 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். 4 படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளேன். 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் இணை செயலாளராக பணிபுரிந்துள்ளேன். நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி எனக்கு நெருங்கிய நண்பர் ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும். தற்போது தொலைக்காட்சி ஒன்றில் நந்தினி என்ற தொடர் வெளியாகி வருகிறது. அந்த தொடரின் கதையை நான்தான் எழுதினேன். அந்த கதையை என்னிடம் பெற்றுக் கொண்ட நடிகர் சுந்தர்.சி அதற்காக ரூ.50 லட்சம் தருவதாக கூறினார். ஆனால் ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதி ரூ.46 லட்சம் பணத்தை தர மறுக்கிறார். 

அடியாட்களை அனுப்பி என்னை மிரட்டுகிறார்கள். பணத்தை தரமுடியாது, உன்னால் முடிந்ததை பார், என்று அடியாட்கள் சொல்கிறார்கள். இதுபோல், நடிகர் சுந்தர்.சி நிறைய பேரை ஏமாற்றி உள்ளார். அவர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சுந்தர்.சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த அண்ணாநகர் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory