» சினிமா » செய்திகள்

ஜிஎஸ்டி குறைப்பு: ட்விட்டரில் அரவிந்த்சாமி கிண்டல்

சனி 7, அக்டோபர் 2017 5:16:48 PM (IST)

ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக வெளியான அறிவிப்பைக் குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இச்செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அச்செய்தியைக் குறிப்பிட்டு நடிகர் அரவிந்த் சுவாமி கூறியிருப்பதாவது: இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். யாராவது முழு விவரங்களைப் படித்தீர்களா? இது முறுக்கு மற்றும் காராசேவைக்கும் பொருந்துமா? தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

சினிமா டிக்கெட்டுகளுக்கு இரட்டை வரி. இடைவேளையில் வாங்கி சாப்பிடும் தின்பண்டங்களுக்கு வரி குறைப்பு. இதை ’அனுமானமான கூட்டு சேமிப்பு திட்டம்’ என விளம்பரப்படுத்தலாம். 5 சதவித ஜிஎஸ்டி என்பதால் அதிக தின்பண்டம் சாப்பிட்டுவிட்டேன். உடல்நலம் சரியில்லை. மருத்துவரிடம் சென்றால் அதிக கட்டணம். ஏன் என்று கேட்டால் ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்த கருவிகளுக்கு 12 சதவித ஜிஎஸ்டி என்றார். அப்படியா?. நான் விரும்புவது 1 இந்தியா, 1 வரி. மாநிலங்கள் தனியாக கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது. அதிகபட்சம் 3 நிலை வரிகள். போகப் போக ஒரே வரி. எளிதாக வருமான வரி தாக்கல். இவ்வாறு அரவிந்த்சுவாமி தெரிவித்திருக்கிறார்.


மக்கள் கருத்து

உண்மைNov 17, 2017 - 01:46:38 PM | Posted IP 122.1*****

நடிகர்களின் வெள்ளை பாதி கருப்பு பாதி சம்பள சமாச்சாரம் ஒழிந்தது! அதனுடைய தாக்கம்தான்!

சாமிNov 17, 2017 - 08:26:27 AM | Posted IP 117.2*****

புரிந்து கொள்ள தெரியாத கூமுட்டை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory