» சினிமா » செய்திகள்

கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது சமந்தா திருமணம்

சனி 7, அக்டோபர் 2017 5:33:06 PM (IST)

கோவாவில் நேற்று நள்ளிரவு நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ஏம் மாய சேஸாவே (தமிழில், விண்ணைத் தாண்டி வருவாயா) படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர். அதன் பின்னர் இந்த ஜோடி, மேலும் 3 படங்களில் நடித்தனர். இதனால் இவர்களது காதல் வளர்ந்தது. ஆனால் வழக்கம்போல் நாங்கள் காதலிக்கவில்லை என கூறி வந்தனர். 

இந்த விஷயம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமணம் நேற்று நள்ளிரவு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுமார் 170 பேர் மட்டுமே ஹைதராபாத்திலிருந்து தனிவிமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThoothukudi Business Directory