» சினிமா » செய்திகள்

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் அறிமுகம்!!

செவ்வாய் 10, அக்டோபர் 2017 12:24:25 PM (IST)

தமிழில் உருவாகவுள்ள "அர்ஜுன் ரெட்டி" ரீமேக்கை பாலா இயக்கவுள்ளார். விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

"அர்ஜுன் ரெட்டி" படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/ டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதன் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்கு படம் "அர்ஜுன் ரெட்டி". குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது.

இதன் தமிழ் ரீமேக்கை  இயக்கவிருப்பது யார் என்று பல்வேறு இயக்குநர்களின் பெயர் செய்திகளில் அடிபட்டது. தற்போது இயக்குநரின் பெயரை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பாலா இயக்கத்தில் தமிழில் "அர்ஜுன் ரெட்டி" ரீமேக் உருவாகவுள்ளது.  தமிழ் சினிமாவில் சேது படம் மூலம் விக்ரமுக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி தந்த பாலா இயக்கத்திலேயே அவரது மகனும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory