» சினிமா » செய்திகள்

வேலு நாச்சியார் திரைப்படத்தை தயாரிக்கும் வைகோ!!

செவ்வாய் 10, அக்டோபர் 2017 12:42:47 PM (IST)வேலு நாச்சியார் கதையைப் படமாக எடுக்க இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களைத் தைரியமாக எதிர்த்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவருடைய கதையை, நாடகமாக பல்வேறு இடங்களில் அரங்கேற்றி வருகிறார் மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ. சென்னை நாரத கான சபாவில், நேற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. 

இதில், நடிகர் சங்கத் தலைவரான நாசர், செயலாளரான கார்த்தி, விஜயகுமார், ரா.பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலு நாச்சியாரின் கதையை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அதை தன்னுடைய கண்ணகி ஃபிலிம்ஸ் சார்பில் படமாக எடுக்க இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThoothukudi Business Directory