» சினிமா » செய்திகள்

கண்டிப்பாக பார்ப்பவர்களை அவள் பயமுறுத்தும் : சித்தார்த்

செவ்வாய் 10, அக்டோபர் 2017 6:58:32 PM (IST)


அவள் திரைப்படம் கண்டிப்பாக பார்ப்பவர்களை பயமுறுத்தும் என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்தார்த் தெரிவித்தார்.

மிலிந்த் இயக்கத்தில் சிதார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அவள். இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் மிலிந்த் உடன் இணைந்து எழுதி தயாரித்திருக்கிறார் சித்தார்த். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சித்தார்த் பேசியதாவது: நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களைத் தாண்டியது. இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஓர் உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். மைனஸ் 10 டிகிரி குளிரில் ஒரு மாதம் வரை இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.

நல்ல ஒரு பேய் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. இந்தப் படம் கண்டிப்பாக பார்ப்பவர்களை பயமுறுத்தும். அந்த அளவுக்கு ஹாரர் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துக்கு பின் இயக்குனர் மிலிந்த் பேசப்படுவார். ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லை.

மூளை அறுவை சிகிச்சை நிபுணரும், அவருடைய மனைவியும் ஓய்வுக்காக பனிமலை பிரதேசத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களது பக்கத்து வீட்டுக்கு ஜெனி என்ற பெண்ணுடன் பெற்றோர்கள் குடியேறுகிறார்கள். அந்த பெண்ணின் பிரச்சினை எப்படி இவர்களையும் பாதிக்கிறது என்பது தான் திரைக்கதை. நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ரங்தே பசந்தி படத்துக்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து இந்தப் படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம்.

ஜில் ஜங் ஜக் படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் பேய் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். இவ்வாறு சித்தார்த் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThoothukudi Business Directory