» சினிமா » செய்திகள்

நெஞ்சம் மறப்பதில்லை அப்டேட்: நவம்பர் 3-ல் வெளியிட திட்டம்

செவ்வாய் 10, அக்டோபர் 2017 7:11:17 PM (IST)

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை நவம்பர் 3-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

நீண்ட நாட்களாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டு வரும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை நவம்பர் 3-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இம்முறை வெளியிட்டே ஆக வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முனைப்புடன் களமறிங்கியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைக்கவே, மறுதணிக்கைக்கு சென்றார்கள். மறுதணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் செல்வராகவன். அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.நெஞ்சம் மறப்பதில்லை அப்டேட்: நவம்பர் 3-ல் வெளியிட திட்டம்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை நவம்பர் 3-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டு வரும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை நவம்பர் 3-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இம்முறை வெளியிட்டே ஆக வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முனைப்புடன் களமறிங்கியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைக்கவே, மறுதணிக்கைக்கு சென்றார்கள். மறுதணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் செல்வராகவன். அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory