» சினிமா » செய்திகள்

திருமணமான பிறகு நாயகிகள் நடிக்க கூடாதா ? : நடிகை கஸ்தூரி கேள்வி

செவ்வாய் 10, அக்டோபர் 2017 7:23:03 PM (IST)

நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா தெரிவித்தார்.

இதைக் குறிப்பிட்டு கஸ்தூரி, திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இன்னும் நாயகனாக நடிக்கிறார்கள். உங்களால் முடியல. அந்த காரணம் தான் என்று ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர் பதிலளித்தார். இதற்கு கஸ்தூரி, ஆனால் ஏன்? அதுதான் என் கேள்வி. தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை? ஏன்? ஏன்? ஏன்? என்று பதிலளித்து இருக்கிறார்.

இப்பதிலுக்கு பலரும் கேள்வி எழுப்பவே, அதற்கு மனைவியின் காதல், கணவரின் தொழில் வாழ்வை பாதிக்குமா? ஏற்றத்தாழ்வுகளைக் காண முடிகிறதா? எதுவோ தவறாக உள்ளது. உண்மையில், பெண்கள் அவர்களின் கணவர்களின்மேல் அவ்வளவு பிரியமாக இல்லை என்று நினைக்கிறேன். பல பெண்களுக்கு வேறு வழியில்லை என்று கருதுகிறேன்.  ஒரு மகளாகவோ, மனைவியாகவோ பெண்கள் சுதந்திரமாக இல்லை' என்று பதிலளித்துள்ளார் கஸ்தூரி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThoothukudi Business Directory