» சினிமா » செய்திகள்

ஹர ஹர மஹாதேவகிக்கு திரையரங்குகள் அதிகரிப்பு

செவ்வாய் 10, அக்டோபர் 2017 7:30:17 PM (IST)

தமிழகத்தில் ஹர ஹர மஹாதேவகி படத்துக்கு திரையரங்குகள் அதிகரிப்பட்டுள்ளதைக் தொடர்ந்து படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

செப்டம்பர் 29-ம் தேதி வெளியான படம் ஹர ஹர மஹாதேவகி. ஸ்பைடர் மற்றும் கருப்பன் ஆகிய படங்களோடு வெளியானாலும், அனைத்து தரப்புக்கும் நல்ல லாபத்தை அளித்துள்ளது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு, குறைந்த விலைக்கு விற்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்றார்கள். மேலும், 2-வது வாரத்தில் சுமார் 100 திரையரங்குகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு இன்றைய விளம்பரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் இந்த வார வசூல் கண்டிப்பாக கூடும் என்பதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்க கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதன் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படப்பிடிப்புக்கு முன்பே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory