» சினிமா » செய்திகள்

தென்னிந்திய பட உலகில் செக்ஸ் தொல்லை: நடிகை ராதிகா ஆப்தே புகார்

புதன் 11, அக்டோபர் 2017 12:19:36 PM (IST)

தென்னிந்திய பட உலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகை ராதிகா ஆப்தே குற்றம்சாட்டியுள்ளார்.

சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ் பட உலகிலும் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவும் தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ராதிகா ஆப்தே தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பட உலகில் அதிக படங்கள் கைவசம் வைத்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி படங்களில் அவர் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்னிந்திய பட உலகம் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது: "தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமைகள் உள்ளன. நான் ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். படம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தோம். அவர் திடீரென்று என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் அதிர்ச்சியானேன். நான் அந்த மாதிரி நிலைமைக்கு போகவில்லை. அப்படிப்பட்டவர்களை உதாசினம் செய்து விட்டேன். அதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்று கருதுகிறேன் என்றார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory