» சினிமா » செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் 100% லவ் படப்பிடிப்பு தொடக்கம்...

புதன் 11, அக்டோபர் 2017 7:02:17 PM (IST)

100% லவ் தமிழ் ரீமேக்கான 100% காதல் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். நாயகியாக அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார். எம்.எம். சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதல் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு. 2018 கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 100% லவ். 2011ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. சுகுமார் இயக்கியிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThoothukudi Business Directory