» சினிமா » செய்திகள்

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வரும் விக்ரமின் ஸ்கெட்ச்

புதன் 11, அக்டோபர் 2017 7:18:21 PM (IST)


விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ஸ்கெட்ச் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி அன்று டீஸர் வெளியீடு, அதனைத் தொடர்ந்து இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றின் மூலம் படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது இப்படத்தை கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறது படக்குழு. கிறிஸ்துமஸ் தின விடுமுறையிலிருந்து பொங்கல் வரை எந்தவொரு பெரிய நாயகர்கள் திரைப்படமும் வெளியீடு இருக்காது என்பது தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


மக்கள் கருத்து

ThoothukudiOct 13, 2017 - 12:35:58 PM | Posted IP 122.1*****

MASS...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory