» சினிமா » செய்திகள்

இறுதிகட்ட படப்பிடிப்பில் நல்லநாள் பாத்து சொல்றேன்

சனி 14, அக்டோபர் 2017 7:53:27 PM (IST)விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்தில் கோவிந்தராஜ் எடிட்டிங் செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக படக்குழு சார்பில் விசாரித்த போது, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் என்ற தலைப்பு படத்தில் முக்கியமான இடத்தில் வரும். ஆகவே, அதையே தலைப்பாக இறுதி செய்தோம். காமெடி கலந்த ஆக்‌ஷன் கதையாகும். கதை அனைவருக்குமே தெரிந்தது என்றாலும், கதை நடக்கும் களம் மிகவும் புதுமையாக உருவாக்கியுள்ளோம். அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் என்று படக்குழு கூறியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory