» சினிமா » செய்திகள்

வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு

திங்கள் 16, அக்டோபர் 2017 11:26:10 AM (IST)

இனிமேல் வருடத்திற்கு எனது 2 படங்கள் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

பொன்.ராம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் சிவகார்த்திகேயன். தீபாவளி வருவதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது: அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி என்றாலே பட்டாசு தான். அதனால் உங்களது குடும்பத்தோடு பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள். உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

நான் உங்களை எல்லாம் சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால்  இவ்வாறு ஆகிவிடுகிறது.ஆனால், அடுத்தாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு படங்களைத் தேர்வு செய்யவுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நரகாசூரன் பட டீசர் : நவ 25 ம் தேதி வெளியீடு

செவ்வாய் 21, நவம்பர் 2017 8:35:06 PM (IST)

Sponsored Ads

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory