» சினிமா » செய்திகள்

விஜய் - முருகதாஸ் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை!!

புதன் 3, ஜனவரி 2018 12:46:13 PM (IST)

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

விஜய்யின் அடுத்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படக்குழு குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள். 

கதாநாயகி குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லை. நடிகர்களில் விஜய் மற்றும் யோகி பாபு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளி அன்று படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory