» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

வாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌

தமிழ்நாட்டில் மே மாதத்தில் கொளுத்தவேண்டிய வெயில் ஏப்ரலிலேயே சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இளைஞர்களே சுருண்டுவிழும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.முதியோர்கள், சிறுவர்கள், பெண்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்து கொள்ள தேவையான டிப்ஸ்கள் பின்வருமாறு,

  • பகல் வேளைகளில் வெயிலில் செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
  • தேவையான அளவு நீர் அவ்வப்பொழுது அருந்த வேண்டும்.
  • கனம் குறைந்த ஆடைகள், நுண்ணிய பருத்தி ஆடைகள் அணியவது நல்லது.   ஆடையை இறுக்கமாக அணிவதை தவிர்க்க வேண்டும். வேயில் வேளையில் வெளியில் செல்லும் போது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு கண்;ணாடிஃகுடைஃதொப்பி, காலணிகள் அணிந்து செல்வது நல்லது.
  • வெப்பம் அதிகமாக இருக்கும் போது குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கடினமான வேலைகளை திறந்த இடங்களில் தவிர்ப்பது நல்லது.
  • பயணத்தின்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • வெயில் காலங்களில் மது, டீ, காப்பி, ரசாயனம் நிறைந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். அவை உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும். 
  • அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
  • அதிக வெயில் நேரத்தில் நிறுத்தி வைத்த வாகனங்களின் அருகாமையில்  குழந்தைகள்ஃசெல்ல பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம்.
  • மயக்கம் அல்லது உடல் நலக்குறைவு ஏற்படுவதாக அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  • Oral Rehydration Solution (ORS),பொதுவாக வீட்டில் தயார் செய்த லசி, மோர், கஞ்சி தண்ணீர், எலுமிச்சை பானம், பால் போன்றவை அருந்தலாம். இவை உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். 
  • பொதுவாக வீட்டை குளுமையாக வைத்திருக்க வேண்டும். வெப்ப காலங்களில் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது நல்லது.
  • உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதற்காக மின் விசிறி, ஈரமான துணிகள்  உபயோகப்படுத்தலாம்.குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. 
  • வீட்டில் வளர்க்கும் பிராணிகளை நிழலில் தங்க வைப்பதோடு அவைகளுக்கு, அவைகளுக்கு அவ்வப்பொழுது குடிக்க நீர் கொடுக்க வேண்டும்.

வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்கான எளியமுறை குறிப்புகள்

  • கடும் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மயக்கம் அடைந்த நபரை குளுமையான  இடத்தில் (நிழலில்) படுக்க வைக்க வேண்டும். ஈரத்துணியினால் அவ்வப்பொழுது துடைக்க வேண்டும் ஃ கழுவ வேண்டும்.உடலின் வெப்பநிலை குறைவு செய்வதற்காக சாதாரண தண்ணீர் தலை, முகத்தின் மீது  தெளித்திட வேண்டும்.
  • கடும் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட , மயக்கம் அடைந்த நபருக்கு Oral Rehydration Solution (ORS), எலுமிச்சை சாறு ஃ கஞ்சி அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரும் பானங்கள் (பழச்சாறு போன்றவை) பருகிட கொடுக்கலாம். 

கடும் வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஃ மயக்கம் அடைந்த நபரை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளுக்கு  அழைத்துச் செல்லவும்.மயக்கம் அடைந்த நபருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொடுப்பதின் மூலம் அவர்களை கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.


மக்கள் கருத்து

ராணிமே 26, 2016 - 05:05:40 PM | Posted IP 103.5*****

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





New Shape Tailors

Johnson's Engineers

Panchai Dairy

CSC Computer Education

selvam aqua


Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory