» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் மினி மாரத்தான் போட்டி

வியாழன் 17, ஆகஸ்ட் 2017 10:31:57 AM (IST)நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சார்பில் 71-வது சுதந்திர தினவிழாவ முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் 461 மாணவர்கள் பங்கேற்றனர். 

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரித் தாளாளர் ஏ.ஆர். சசிகரன் கொடி அசைத்து வைத்து துவக்கி வைத்தார்.  பள்ளி முன்பிருந்து புறப்பட்டு மினிமாரத்தான் போட்டி வாழையடி, வகுத்தான்குப்பம், நாசரேத் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் 461 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 350-க்கும் அதிகமான மாணவர்கள் பந்தய தூரத்தை சிறப்பாக நிறைவு செய்தனர். 

இதில் முதல் இடத்தை ஜெபக்குமார் என்ற மாணவனும், இரண்டாம் இடத்தை ஜான் வின்சென்ட் என்ற மாணவனும், மூன்றாம் இடத்தை எட்வின் (என்ற மாணவனும் பிடித்தனர். இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆசிரியர் அதிசயம் ஆரம்ப ஜெபம் செய்தார். தாளாளர் ஏ.டி.ஹெச். சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜாண்சன் பால்டேனியல் வரவேற்று பேசினார். 

தேசிய மாணவர் படை அதிகாரி ஜெயசீலன் முன்னிலை வகித்தார். திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் கிருபாகரன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரித் தாளாளர் ஏ.ஆர்.சசிகரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் கால்டுவெல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கால்டுவெல், உடற்கல்வி ஆசிரியர் சுஜித், தனபால் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory