» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலி்டெக்னிக்கில் புதியகட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

வியாழன் 24, ஆகஸ்ட் 2017 8:26:04 PM (IST)
நாசரேத் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக்கில் புதியகட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயம் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி–நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்திலுள்ள மர்காஷியஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆண்கள் விடுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே. ஜெயசீலன் பெயரில் டைனிங் ஹால் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் குருத்துவ செயலர் தேவராஜ் ஞானசிங் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்.இ.சி. தேவசகாயம் ஆசீர்வாத ஜெபம் செய்து அடிக்கல் நாட்டினார்.  லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜன் அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். 

விழாவில் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் அட்வான்ஸ் டிரைய்னிங் சென்டர் தாளாளர்  ஆர்ச் பால் ஜாண்சன், சாத்தான்குளம் கல்வி யியல் கல்லூரி தாளாளர் .மாமல்லன்,ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி தாளாளர்சசிகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் தூத்துக்குடி–நாசரேத் திருமண்டலக் கல்லூரிகளின் கல்வி நிலைவரக்குழு செயலர்   ஜெபச்சந்திரன் தலைமையில்,  முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், கல்லூரி பர்சார் முத்துசந்திரசேகர்,  ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் செய்தி ருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory