» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மெஞ்ஞானபுரம் சி.பா. பள்ளியில் விளையாட்டு விழா

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2017 7:11:46 PM (IST)


மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு சி.பா.ஆதித்தனாரின் தொடக்கப்பள்ளி, சி.ப.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளிகளின் விளையாட்டு விழா நடந்தது.

பள்ளித்தலைமை ஆசிரியர் உதவிதொடக்க கல்வி அலுவலர் நம்பித்துரை தலைமை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார்.  பள்ளிச் செயலர் ஆதிலிங்கம், பொன்ராஜ் விக்ட்ர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளி மாணவ, மாணவியர்களின் குழு உடற்பயிற்சி, ஸ்டிக் கேம்ஸ், யோகாசனம், தனி, குழு விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. இதில் பள்ளி கமிட்டித்தலைவர் சங்கரநாராயணன், பெற்றோர் ஆசிரிய, கழகத்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory