» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நீங்க தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும்: சசிகலாவிடம் சரத்குமார் நேரில் வலியுறுத்தல்

செவ்வாய் 13, டிசம்பர் 2016 4:24:25 PM (IST)

அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சசிகலாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். சரத்குமார் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புரட்சித் தலைவியின் வீட்டிற்கு இது போன்ற சூழலில் வந்திருப்பது வருத்தமாக உள்ளது. அவர் இறக்கவில்லை. நம்முடன் தான் இருக்கிறார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் விட்டுச் சென்ற பணியை அவருடன் 33 ஆண்டுகளாக அன்பு சகோதரியாக இருந்த சின்னம்மா அவர்கள் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக தோழர்களும், தோழமை கட்சியினரும் அம்மா எந்த இலக்கை நோக்கி கடந்த தேர்தலில் பயணித்தார்களோ அதை முழுமையாக அடைய சின்னம்மா எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நாம் சின்னம்மாவுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து

பொதுமக்கள்Dec 15, 2016 - 09:26:22 AM | Posted IP 193.1*****

தமிழன் தான் நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறீர்கள் , இப்ப என்ன வந்துது , சரத்குமாரின் கண்ணோட்டம் ஒன்றும் தவறில்லை. சொல்லுங்கள் பார்ப்போம் இப்பதவிக்கு யார் சரியான ஆள் என்று ?

பொதுமக்கள்Dec 15, 2016 - 09:26:22 AM | Posted IP 193.1*****

தமிழன் தான் நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறீர்கள் , இப்ப என்ன வந்துது , சரத்குமாரின் கண்ணோட்டம் ஒன்றும் தவறில்லை. சொல்லுங்கள் பார்ப்போம் இப்பதவிக்கு யார் சரியான ஆள் என்று ?

நல்ல உள்ளங்கள்Dec 14, 2016 - 04:50:47 PM | Posted IP 180.9*****

ஜெலலிதா மட்டும் தான் அதிமுகவின் தலைவி வேற யாரும் இல்லை. சசிகலா சின்னமா என்று ஏற்றுகொள்ளமாட்டாது. அம்மா ஒருவரே அது ஜெலலிதா மட்டும் தான் இப்படிக்கு நல்ல உள்ளங்கள்

ச ம கDec 14, 2016 - 01:14:03 PM | Posted IP 115.2*****

ச ம க வை களைது விடுங்கள்

tamilDec 14, 2016 - 05:04:27 AM | Posted IP 203.1*****

பயித்திய கார பயல். விளங்குகிற மாதிரி தெரியவில்லை.

சாமிDec 13, 2016 - 09:38:55 PM | Posted IP 117.2*****

சாதி அரசியல் விரும்பிகள் கருத்துக்கு உடன்படாத சரத்

ஜூ ஜூDec 13, 2016 - 08:33:53 PM | Posted IP 176.2*****

அட சுரத்து. உமக்கு என்ன ரெத்தம் ஓடுது.

tamilanDec 13, 2016 - 07:50:49 PM | Posted IP 122.1*****

ethu intha polapu

ஒருவன்Dec 13, 2016 - 06:37:55 PM | Posted IP 59.89*****

வேற வேலையே இல்லையா ??? மக்களை நம்பி ஆட்சிக்கு வந்தீர்களா ?? பணத்துக்காக வந்தீர்களா ???

ச .ம .க வின் ஒரே தொண்டன்Dec 13, 2016 - 05:03:03 PM | Posted IP 122.1*****

தலைவரே நீங்கள்தான் காமராஜரின் உண்மை துரோகி வாழ்க உங்கள் சுயநலம்

makkalDec 13, 2016 - 04:51:28 PM | Posted IP 59.96*****

உமக்கும் புத்தி கெட்டு விட்டதா

IndianDec 13, 2016 - 04:44:37 PM | Posted IP 61.3.*****

One more wrong step in your political life.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Johnson's Engineers

Universal Tiles Bazar


selvam aqua

Sterlite Industries (I) Ltd
Thoothukudi Business Directory