» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது: தா.பாண்டியன் சொல்கிறார்

வியாழன் 15, டிசம்பர் 2016 5:03:49 PM (IST)



சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் சசிகலாவை நேற்று தா. பாண்டியன் துயரம் தோய்ந்த முகத்துடன் சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு சசிகலாவிடம் தா. பாண்டியன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் கூறியதாவது:

ஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட யாரையும் அப்போது சந்தித்து பேச இயலவில்லை. அதனால் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நானும் சசிகலாவும் அரசியல்வாதி. போயஸ் கார்டனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கூட அரசியல்வாதிகள். சசிகலாவுக்கு பின்னால் மக்களின் சக்தி இருக்கிறது. இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.


மக்கள் கருத்து

சாமிDec 31, 2016 - 01:53:00 PM | Posted IP 59.96*****

உண்மையை சொல்வதில் தவறில்லை

மக்கள்Dec 30, 2016 - 05:07:07 PM | Posted IP 117.2*****

திரு . தா .பாண்டியன் அவர்களே ஏழைகளின் கட்சியை இப்படி அடமானம் வைக்குறிங்களே ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



CSC Computer Education










Thoothukudi Business Directory