» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அரசியல் விஷயத்தில் கமல் தைரியமானவர்... ரஜினி குழப்பவாதி: அன்புமணி அட்டாக்..!!

செவ்வாய் 16, மே 2017 3:20:49 PM (IST)

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் நேற்று முதல் அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5 நாட்கள் புகைப்படங்கள் எடுப்பதற்காக அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர் தான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது கடவுள் கையில் தான் உள்ளது என்றார். கடைசி வரை அவர் தனது முடிவை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ரஜினியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள பாமக நிர்வாகியை சந்திக்க வந்த அவரிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும்.

20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். ஆனால், உறுதியான கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது, புலி வருது புலி வருது என்று சொல்வது போன்றுள்ளது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக வரவேண்டும். இது போன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றது. கமல் தைரியமானவர். அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். கமல், ஒரு தைரியமான நபர் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


selvam aqua


Universal Tiles Bazar







New Shape Tailors



Thoothukudi Business Directory