» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அன்று ஜெயலலிதாவுக்கு அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தவர் ரஜினி.. துரை முருகன் கடும் தாக்கு..!!

செவ்வாய் 16, மே 2017 3:24:14 PM (IST)

அன்று ஜெயலலிதாவுக்கு அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தவர் ரஜினி. இன்று பிழைப்புக்காக ஏதோ பாடுகிறார் என திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கடுமையாக தாக்கியிருக்கிறார் .

அரசியலுக்கு இதோ வருகிறேன்... அதோ வருகிறேன் என 30 ஆண்டுகாலமாக பூச்சாண்டி காட்டுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழலில் அவரை பயன்படுத்த பாஜக திட்டமிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் ஞானோதயம் பெற்றவராக தமது ரசிகர்களுடனான சந்திப்பில் 1996-ல் திமுக- தமாகா கூட்டணியை ஆதரித்தது ஒரு அரசியல் விபத்து கூறினார் ரஜினி. 

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது, மோடியின் ஊதுகுழலாகிவிட்டார் ரஜினிகாந்த். அவரது மிரட்டலுக்கு பயந்துதான் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார். அன்று ஜெயலலிதாவை எதிர்த்து தாக்கு பிடிக்காது; தொழில் முடங்கிப் போய்விடும் என அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தவர் ரஜினி. அன்று நாம் ஆதரிக்காமல் இருந்தால் அவரது நிலைமையே வேற.. இன்றும் பிழைப்புக்காக ஏதோ பாடுகிறார்.. பாடிவிட்டுப் போகட்டும் என போட்டு தாக்கியிருக்கிறார் துரைமுருகன்.

திமுகவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்தை எதிர்க்காமலும் கண்டு கொள்ளாமலும் கடந்து செல்வது என்பதுதான் இப்போதைய யுக்தியாம். ரஜினிகாந்த் வெளிப்படையாக வரும்போது கச்சேரி வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.


மக்கள் கருத்து

makkalமே 29, 2017 - 07:18:44 PM | Posted IP 117.2*****

god

சாமிமே 16, 2017 - 06:40:20 PM | Posted IP 160.2*****

திமுகவுக்கு இனி ஏழரைதான்

சந்தோஷ்மே 16, 2017 - 05:47:11 PM | Posted IP 125.1*****

மெண்டலை நம்பி பின்னாலே போறவனும் ஒரு மெண்டலாகத்தான் இருப்பான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here

Johnson's Engineers


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education

selvam aqua

Universal Tiles Bazar



New Shape Tailors



Thoothukudi Business Directory